மன்னார் - மின்னியலாளர்களுக்குதொழில் துறை உரிமம் (லைசன்) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
மன்னார் மாவட்டம் மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை(சிடா) உட்பட பல அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வழங்கவுள்ளது.
மின்சாரத் தொழில்த் துறைக்கான ஒழுங்குறுத்துகை அமைப்பான இலங்கையின் பொதுப் பயன் பாடுகள் ஆணைக்குழு இந்த உரிமத் திட்டத்தை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்ட மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான தேசிய விழிப்புணர்வு திட்டம் இன்று வியாழக்கிழமை (12 ஆம் திகதி ) காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மன்னார் நகரசபை மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே.எஸ் வசந்தகுமார் தலைமையில் நடைப்பெற்றது.
இந்தநிகழ்வுக்காக மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 350 க்கும் மேற்பட்ட மின்னியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும், இன்று கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை சார்பில் தேசிய தொழிற் பயிற்சி தகைமைகள் (NVQ)தொடர்பாகநிலைய பொறுப்பதிகாரி . சிவபாலன், தேசிய பயிலுநர் பயிற்சி அதிகாரசபை சார்பில் முகாமைத்துவ உதவியாளர் செல்வி. அம்பிகாதேவி, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் . பத்மராசா போன்றோர் சமர்ப்பிப்புக்களை செய்தனர்.

Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment