மன்னார் மனித புதைகுழி வழக்கில் திடீர் திருப்பம்....
மன்னார் மனித புதைகுழி தொடர்பாக விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு வடமாகாண மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் புதைகுழி வழக்கு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பான சட்டத்தரணிகள் நீதி மன்றத்தில் ஆஜராக முடியாது என மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த தீர்ப்பினை இடை நிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு இன்று வடமாகாண மேல் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரட்னவேல் மூலம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவை விசாரித்த வவுனியா வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட குறித்த தீர்ப்பினை வருகின்ற 27-ஆம் தேதி வரை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இம் மாதம் 27 திகதி வரை மன்னார் மனித புதைகுழி தொடர்பாக எந்த ஒரு விசாரணைகளை நடத்த முடியாது என குறித்த தீர்ப்பில் அறிவிக்கப்பட்டு குறித்து தடையுத்தரவானது மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
March 14, 2020
Rating:

No comments:
Post a Comment