வன்னியில் சுயேட்சையாக போட்டியிட தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பு மனுத்தாக்கல் -
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த வேட்புமனு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று கட்சியின் வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின் மாவட்ட செயலக முன்றலில் உள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு சென்ற வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் பண்டாரவன்னியனின் சிலைக்கு பொன்னாடை போர்த்தி நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஆதரவுடன் சைவ மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி குறித்த கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னியில் சுயேட்சையாக போட்டியிட தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பு மனுத்தாக்கல் -
Reviewed by Author
on
March 13, 2020
Rating:

No comments:
Post a Comment