ஆண்களின் விந்தணுக்களை கொரோனா வைரஸ் பாதிக்குமா?
நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கமும் இறப்பும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸானது ஆண்களின் விந்தணுக்களையும் பாதிக்கலாம் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த ஆய்வானது உறுதி செய்யப்படவில்லை எனவும் கொரோனாவால் தாக்கப்பட்ட ஆண்கள் குணமடைந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த வைரஸை சோதனை செய்ததில் ஆண்களின் விந்தணுக்களையும் தாக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏனெனில் கொரோனா வைரஸ், புரோட்டின் மற்றும் ஏசிஇ 2 என அழைக்கப்படும் நொதி (enzyme) ஆகியவற்றின் மூலம் செல்களை ஆக்கிரமிக்கிறது.
இந்த ஏசிஇ 2 நொதியானது ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஆண்களின் விந்தணு உற்பத்தி, அதன் எண்ணிக்கையில் பாதிப்பையும் அவர்களுடைய பாலின உணர்ச்சியை பாதிக்கலாம் எனவும் மொத்தத்தில் ஆண்களின் பாலின வாழ்க்கைத் தரம் குறையலாம் என கூறப்படுகின்றது.
மேலும் ஆய்விற்குட்படுத்தப்பட்ட “கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய பின்பே அவர்களுடைய விந்தணுக்களை பரிசோதனை செய்து உறுதியாகச் சொல்லமுடியும். அதுவரை சந்தேகத்தின் அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படும்” என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆண்களின் விந்தணுக்களை கொரோனா வைரஸ் பாதிக்குமா?
Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment