கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி-பிரித்தானியாவில் அனைத்து பாடசாலைகளும் மூட உத்தரவு -
வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தை அடுத்து தற்போது பிரித்தானியாவும் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 33 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிதாக 676 பேர் இலக்காகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,626 என அதிகரித்துள்ளது.
இந்த நிலையிலேயே வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கொட்லாந்தை பொறுத்தமட்டில் அங்குள்ள 20 சதவிகித ஆசிரியர்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகள் அனைத்தும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தகுந்த முடிவை தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் எடுக்கப்படும் என Nicola Sturgeon தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரித்தானியா பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தகுந்த நேரத்தில் உரிய முடிவெடுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனும், அதுபோன்ற ஒரு முடிவை மேற்கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே, பாடசாலைகள் மூடுவதால் குடியிருப்பில் இருக்கும் வயதானவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும்படி கோரப்படலாம் எனவும்,
அதேவேளை பெற்றோர்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லும் நிலை ஏற்படாலம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பானது வயதானவர்களுக்கே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலையும் உள்ளது.
மேலும், பிரித்தானியாவில் உள்ள வயதானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி-பிரித்தானியாவில் அனைத்து பாடசாலைகளும் மூட உத்தரவு -
Reviewed by Author
on
March 19, 2020
Rating:

No comments:
Post a Comment