கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் சுவிஸ் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட மகிழ்வான செய்தி
முதற்கட்டமாக தற்போது அவர் உருவாக்கியுள்ள ம்ருந்தை விலங்குகளுக்கு செலுத்தி ஆய்வு செய்து வருவதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாஸல் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Peter Burkhard. இவரது நிறுவனம் Alpha-O. தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு மருந்தை கண்டறியும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார் Peter Burkhard.
சீனாவின் வுஹான் நகரில் அதிக பாதிப்புகளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வந்த காலகட்டத்தில்,
ஆராய்ச்சியாளர் Peter Burkhard தமது ஆய்வகத்தில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறியும் முனைப்பில் களமிறங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மத்தியில் தமது பணிகளை துவங்கியதாக கூறும் 57 வயதான பீற்றர் அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
மலேரியாவுக்கான தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ள இவர், தற்போது மருத்துவ ரீதியான முதற்கட்ட சோதனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் தொடர்பில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறிந்துள்ள பீற்றர், அதை மிருகங்களுக்கு சோதனை செய்யும் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
தடுப்பு மருந்துகளில் முதல் நிலையான இந்த சோதனை வெற்றி பெற்றால், அதற்கு அடுத்த கட்டமான மருத்துவ ரீதியான சோதனைக்கு அனுமதிக்கப்படும்.
இதனிடையே ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, அவர் ஏற்கனவே சுவிஸ்மெடிக் மற்றும் எஃப்.டி.ஏ உடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்து உருவாக்குவதில் நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம் என பெருமை பொங்க பேசியுள்ள பீற்றர்,
தற்போதைய சோதனைகள் சாதகமாக அமைந்தால், கொரோனா வைரஸ் தொடர்பில் விலங்குகளுக்கு மேற்கொண்ட சோதனையில் வெற்றிபெற்ற முதல் தடுப்பு மருந்து இதுவாகத் தான் இருக்கும் என்றார் நம்பிக்கையுடன்.
கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் சுவிஸ் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட மகிழ்வான செய்தி
Reviewed by Author
on
March 19, 2020
Rating:

No comments:
Post a Comment