கொரோனா வைரஸ் தொற்று வேகம்- அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் -
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான்ன் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது.
உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'' நான் அதிகாரபூர்வமாக தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன். இந்த நடவடிக்கையின் 50 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்’’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று வேகம்- அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் -
Reviewed by Author
on
March 14, 2020
Rating:

No comments:
Post a Comment