அமெரிக்கா கொரோனாவிற்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது-மிக விரைவில் மனிதர்களுக்கு பரிசோதனை -
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை மிக விரைவில் மனிதர்களிடையே பரிசோதனை செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் காட்டு தீ போல் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரவி வருகின்றது.
இதுவரை இந்த நோய் தொற்றால் 80,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் மோடர்னா என்று அழைக்கப்படும் அமெரிக்கவை தளமாக கொண்டு செயற்படும் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அது மிக விரைவில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இந்த தடுப்பூசியை அமெரிக்க அரசாங்கம் அவர்களது தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசி இரண்டு அளவுகளை கொண்ட மருந்துகளை கொண்டிருக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
COVID - 19 தொற்று காரணமாக பல்வேறு பங்கேற்பாளர்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேற தயங்குவதால் முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் பல ரத்துச் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த தடுப்பூசி தயாரிப்பு இறுதிக்கட்ட ஆராய்ச்சியை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது இந்த ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா கொரோனாவிற்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது-மிக விரைவில் மனிதர்களுக்கு பரிசோதனை -
Reviewed by Author
on
March 04, 2020
Rating:

No comments:
Post a Comment