பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் -
பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் இருக்கும் தேர்தல் சட்டம் பழைமையானது என்பதால், அதில் திருத்தங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று அஸ்கிரிய மாநாயக்கரை சந்தித்து ஆசிப் பெற்றுக் கொண்ட போதே மாநாயக்கர் தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
பௌத்த பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதால், பௌத்த சாசனம் பாதிப்புக்கு உள்ளாகும்.
கடந்த காலங்களை போல் ஆட்சியாளர்கள் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்யும் வகையில் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டியது பிக்குமாரின் பணி.
இதனை தாண்டி பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது பௌத்த சாசனத்திற்கு பெரிய பாதிப்பு எனவும் மாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாயக்க தேரரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய,
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாயக்கர் தேரர்களை சந்திக்க வேட்பாளர்கள் செல்ல முடியும் என்ற போதிலும் விகாரை வளவில் இருந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் -
Reviewed by Author
on
March 04, 2020
Rating:

No comments:
Post a Comment