2400000 கடந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை....
இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய 5 நாடுகளில் மட்டும் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்,
கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என நிபுணர்கள் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் 24 லட்சத்து 4 ஆயிரத்து 866 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு இலக்கானவர்களில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து 6 லட்சத்து 24 ஆயிரத்து 848 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர் என்றபோதும், உலகம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 925 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவால் அதிக இறப்புகளை எதிர்கொண்ட நாடுகள்:
- அமெரிக்கா - 40,548
- ஸ்பெயின் - 20,453
- இத்தாலி - 23,660
- பிரான்ஸ் - 19,718
- பிரித்தானியா - 16,060
2400000 கடந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை....
Reviewed by Author
on
April 20, 2020
Rating:

No comments:
Post a Comment