19ம் ஆண்டு திருமண நாள்! பிரபல முன்னாள் கூடைபந்து வீரரின் மனைவி பதிவிட்ட புகைப்படம் -
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முன்னாள் கூடைபந்து வீரரின் மனைவி தங்களுக்கு இன்று 19வது திருமண நாள் என்று உருக வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Kobe Bryant அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரராவார். அவர், இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் மகள் Gigiயும் பலியாகினார்.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட Kobe Bryant-னின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், Kobe Bryant மனைவியான Venessa உருக வைக்கம் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், என்னுடைய அரசர், என் இதயம், என் சிறந்த நண்பர். மகிழ்ச்சியான 19வது திருமணநாள் வாழ்த்துகள். நான் உங்களை மிகவும் இழக்கிறேன். நான் உங்கள் தோளில் சாய்ந்து இருக்க விருப்பினேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களது வருத்ததையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
19ம் ஆண்டு திருமண நாள்! பிரபல முன்னாள் கூடைபந்து வீரரின் மனைவி பதிவிட்ட புகைப்படம் -
Reviewed by Author
on
April 20, 2020
Rating:

No comments:
Post a Comment