இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு: வெளியான விரிவான தகவல் -
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மாலை வரை 3 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் 274 மாவட்டங்கள் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,
சிகிச்சை பலனின்றி இதுவரை 79 பேர் பலியாகியுள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி 267 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு: வெளியான விரிவான தகவல் -
Reviewed by Author
on
April 06, 2020
Rating:

No comments:
Post a Comment