500 கி.மீ நடந்தே வந்த வாலிபர் பரிதாப மரணம்- கதறும் உறவுகள்
இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் வேலை, கல்வி என பல்வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் நடந்தே சொந்த ஊருக்கு திரும்பும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ் பாலசுப்ரமணி (21). இவர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வேலை செய்துவந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமம் ஏற்பட்டத்தை தொடர்ந்து தமிழகம் திரும்ப முடிவு செய்தார்.
இதனையடுத்து தன்னை போன்ற மற்ற 26 பேருடன் சேர்ந்து சுமார் மூன்று நாட்கள் நடந்தே வந்த லோகேஸ் புதன் இரவு தெலுங்கானா மாநிலத்தை அடைத்துள்ளார்.
அங்கே சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியிருந்த போது, திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது, இதனையடுத்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லோகேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
500 கி.மீ நடந்தே வந்த வாலிபர் பரிதாப மரணம்- கதறும் உறவுகள்
Reviewed by Author
on
April 05, 2020
Rating:

No comments:
Post a Comment