அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பிரச்சினையால் வாரத்திற்கு 5 மில்லியன் லீற்றர் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா! -


கொரோனா பிரச்சினையால், கனடா தனது பால் உற்பத்தியாளர்களை வாரத்திற்கு 5 மில்லியன் பாலை குப்பையில் கொட்டச் சொல்லியுள்ளது.
கனடாவைப் பொருத்தவரை, அங்கு Dairy Farms of Ontario என்னும் பால் உற்பத்தி - வழங்கல் நிர்வாக அமைப்பு, பால் விலை சீராக இருக்கும் வகையில் பால் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

அதாவது, சென்ற வாரம் கொரோனா அச்சத்தால் மக்கள் பாலை வாங்கி வீடுகளில் அதிக அளவில் சேமித்ததால் பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலை இருந்ததால், அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்படி பண்ணையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆனால், தற்போது அப்படி வாங்கிக் குவிப்பது குறைந்துவிட்டதால் பாலை குப்பையில் கொட்டும்படி அந்த அமைப்பே உற்பத்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், உணவகங்கள், பள்ளிகள் ஆகியவையும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ளதால், மொத்தமாக பால் கொள்வினை செய்வது அதிரடியாக குறைந்துவிட்டது.
இதனால் கடைகளில் பாக்கெட்களில் வைக்கப்பட்டுள்ள பால் விலை குறையும் நிலை உருவாகியுள்ளது.
ஆகவே, உற்பத்தி செய்யப்படும் பாலை குப்பையில் கொட்டுவதால், இந்த நிலை சீராகும் என Dairy Farmers of Ontario அமைப்பு கருதுகிறது.
ஆகவே, மாகாணம் முழுவதும் 500 பால் உற்பத்தியாளர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஐந்து மில்லியன் லிற்றர்கள் பாலை குப்பையில் கொட்ட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

55 வருட வரலாற்றில், இதற்கு முன் ஒரு முறைதான் Dairy Farmers of Ontario அமைப்பு இதேபோல் பாலை குப்பையில் கொட்டச் சொல்லியிருக்கிறது என்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள். தற்போது கொரோனாவால் அதே வரலாறு திரும்பியிருக்கிறது!


கொரோனா பிரச்சினையால் வாரத்திற்கு 5 மில்லியன் லீற்றர் பாலை குப்பையில் கொட்டச் சொல்லும் கனடா! - Reviewed by Author on April 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.