கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடித்த அவுஸ்திரேலியா? -
ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த மருந்து கொரோனா வைரஸை கொல்வது கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா - மெல்பேர்ணில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், Ivermectin என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் SARS-CoV-2 வைரஸை அழிக்க கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“இந்த மருந்தின் ஒரு டோஸ் அனைத்து வைரஸ் ரிபோநியூக்ளிக் அமிலத்தையும் (வைரஸின் அனைத்து மரபணு பொருட்களையும் முழுமையாக நீக்கியது) 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும் என்பதையும், 24 மணி நேரத்தில் கூட அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைவதனையும் நாங்கள் கண்டறிந்தோம்” என மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி நிறுவனத்தின் வைத்தியர் Kylie Wagstaff தெரிவித்துள்ளார்.
வைரஸில் Ivermectin மருந்து எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவில்லை என்றாலும், இந்த மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக இந்த மருந்து மனிதர்களுக்கு தகுந்த சரியான அளவை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மனிதர்களின் உடலுக்கு எந்த அளவு மருத்து பாதுகாப்பானதென ஆராயப்பட்டு வருகின்றது.
“நாங்கள் ஒரு உலகளாவிய தொற்றுநோயை எதிர் கொண்டிருக்கிறோம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லை.
இவ்வாறான காலங்களில், உலகெங்கிலும் ஏற்கனவே கிடைத்த ஒரு மருந்து கலவை எங்களிடம் இருந்தால், அது விரைவில் மக்களுக்கு உதவக்கூடும்” என்று வைத்தியர் Wagstaff குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு தடுப்பூசி பரவலாகக் கிடைப்பதற்கு முன்னதாகவே இந்த மருந்து உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை எதிர்த்து போராட Ivermectin பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அதை முன்மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு நிதி தேவைப்படுகிறது.
Ivermectin என்பது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும்.
இது எச்.ஐ.வி தொற்று, டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடித்த அவுஸ்திரேலியா? -
Reviewed by Author
on
April 04, 2020
Rating:

No comments:
Post a Comment