இலங்கையில் 330ஆக அதிகரித்தது கொரோனா தொற்று -
கொரோானா வைரஸ் தொற்றுடன் மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றிய 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தபட்டிருந்த பேருவளை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்றைய நோயாளி பொலன்னறுவை வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று குணமடைந்து வெளியேறியுள்ளார். இதனடிப்படையில் இதுவரை 105 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் 330ஆக அதிகரித்தது கொரோனா தொற்று -
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment