வடகொரியா-மர்ம தேசத்தில் அடுத்த அதிபர் யாராக இருக்கும்? வெளியான தகவல் -
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அவரது தங்கை கிம் யோ ஜோங் ஏற்கனவே அந்த நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தனது தங்கையுடன் கிம்மிற்கு நெருங்கிய உறவு இருப்பதாக கூறப்படுகிறது. கிம் சங் ராணுவப் பள்ளியில் படிப்பை முடித்த கிம் யோ ஜோங், கிம் சங் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டரில் மேல்படிப்பை முடித்துள்ளார். இவருக்கு வயது 31. கிம் ஜாங் உன் வயது 36.
2014ஆம் ஆண்டிலும் கிம் ஜாங் உன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும்போது, அவரது சகோதரிதான் அவரது அரசு வேலைகளை பார்த்துக் கொண்டார் என்ற தகவல் தெரிவிக்கின்றன.

கொரிய தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து தனது சகோதரியை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கிம் நீக்கினார். இந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் அவர் பொலிட்பீரோவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்தே, கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேரிட்டால், அவரது இடத்திற்கு அவரது தங்கை கிம் யோ வருவார் என்று நம்பப்படுகிறது.
ஏப்ரல் 11ஆம் திகதி கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கிம் ஜாங் தனது தங்கையை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார்.
இதற்குப் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி நடந்த தனது தாத்தாவின் பிறந்த நாளில் கிம் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அமெரிக்க பத்திரிகைகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்த விவகாரங்கள் எதுவும், அந்நாட்டில் நடக்கவில்லை என்று தென்கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது.
வட கொரியா நாட்டில் பல செய்திகள் மர்மமாகவே இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், கிம் ஜாங் உன்னின் தந்தை இரண்டாம் கிம் ஜாங் 2008ஆம் ஆண்டில் நடந்த அந்த நாட்டின் 60வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, அவருக்கு ஸ்ட்ரோக் என்று கூறப்பட்டது. 2011ஆம் ஆண்டில் இறக்கும் வரை இந்த தகவல்கள் கசியவிடவில்லை.
இதேபோல் 2014 ஆம் ஆண்டிலும் கிம் ஒரு மாதத்திற்கு மேல் காணாமல் போனார். இறுதியில் அவர் காலில் ஏற்பட்டு இருந்த கட்டியை அகற்றுவதற்கான சிகிச்சையில் இருந்தார் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போதும், மர்மம் நீடிக்கிறது.
வடகொரியா-மர்ம தேசத்தில் அடுத்த அதிபர் யாராக இருக்கும்? வெளியான தகவல் -
Reviewed by Author
on
April 22, 2020
Rating:
No comments:
Post a Comment