ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில்....
காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச அஞ்சலி செலுத்தும் நோக்கில் அன்னாரது பூதவுடல் இன்று (28) பாராளுமன்ற வளாகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ளது. முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 11.30 மணிக்கு பூதவுடல் பாராளுமன்ற வளாகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் காலஞ்சென்ற கௌரவ ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் சகல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்துடன் இணைந்த திணைக்களங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பணியாளர்கள் முற்பகல் 10.15 மணியளவில் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.
ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில்....
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment