ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகள் விமான சேவை ஆரம்பிப்பதில் தாமதம்
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை அந்த காலத்தை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது.
உலகளாவிய விமான நிறுவனங்கள் நாடுகளுக்கிடையிலான விமான பயணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் அத்தியாவசிய மருத்துவ பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை போக்குவரத்து செய்ய சரக்கு விமான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய இக்கட்டான காலகட்டத்திலும் கூட அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இலங்கை விமான நிறுவனம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
தேவையேற்படின் பயணிகளுக்கான சிறப்பு விமான சேவைகளை முன்னெடுக்க தயார் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகள் விமான சேவை ஆரம்பிப்பதில் தாமதம்
Reviewed by Author
on
May 14, 2020
Rating:

No comments:
Post a Comment