சட்டவிரோத மண் கொள்ளையர்கள் நால்வர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களும் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
பொண்டுகள்சேனை மற்றும் மிராவோடை வெம்பு ஆகிய வெவ்வேறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நான்கு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோத மண் கொள்ளையர்கள் நால்வர் கைது
Reviewed by NEWMANNAR
on
May 17, 2020
Rating:
No comments:
Post a Comment