ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோக சேவை நிறுத்தம்
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோக சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பரீட்சை நடவடிக்கைகள், நேர்முக பரீட்சைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வௌிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை விரைவில் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் தேவையுடையோர் தமது விபரங்களை கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தி அதனை பிரதேச செயலகத்தின் அடையாள பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோக சேவை நிறுத்தம்
Reviewed by Author
on
May 14, 2020
Rating:

No comments:
Post a Comment