அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கம் ஏழை சாரதிகள் சங்கம் இல்லை-செயலாளர் என்.ஆர்.சுதர்சன்.

வட மாகாண சபையில் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னார் மாவட்ட தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடி  மேலதிகாரிகள் ஊடக ஓரு நிரந்தர இடத்தை பெற்று கொடுத்திருக்கலாம்.
ஏன் அதற்கு நீங்கள் முன் வரவில்லை? இது உங்களது இயலாமையை காட்டும் செயல்பாடுதானே என வட மாகாண முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரனிடம் மன்னார் மாவட்ட தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் என்.ஆர்.சுதர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தின் ஊடாக தனது கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,,

10  இலட்சம் தொடக்கம் 70 இலட்சம் ரூபாய் வரை பெறுமதி கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் வாகன  உரிமையாளர்களுக்காக ஏழை உரிமையாளர்கள் என்றும் ஏழை சாரதிகள் என்றும் வக்காலத்து வாங்குகின்றீர்கள்.

இது கொழும்பு நாராயன் பிட்டியில் உள்ள தொழிற்சங்கம் ஓன்றில் பதியப் பட்ட ஒரு தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கம் என்பதை கூறிக் கொள்வதோடு ஏழை சாரதிகள் சங்கம் இல்லை என்பதை தெரியப் படுத்துகின்றேன்.

டெனீஸ்வரன் நீங்கள் திரும்பத் திரும்ப பொய் சொல்லி உங்களுடைய நலனுக்காக மக்களை ஏமாற்றி விடலாம் என நினக்கின்றீர்கள்.இனியும் மன்னார் நகர மக்கள் ஏமாற மாட்டார்கள். மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை நினiவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது அரசியல் பித்தலாட்டங்கள் இனி வரும் காலங்களில் மக்கள் மத்தியில் எடு படாது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.மன்னார் நகர மக்கள் தெளிவாக தான் இருக்கின்றார்கள் என்பதனை மீண்டும் உங்களுக்கு ஞாபகப் படுத்துகின்றேன்.
மேலும் டெனீஸ்வரன்   நீங்கள் வடமாகாண சபையில் அமைச்சராக இருந்த காலத்தில் மன்னார் மாவட்ட தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடி  மேலதிகாரிகள் ஊடக ஓரு நிரந்தர இடத்தை பெற்று கொடுத்திருக்கலாம் அல்லவா?

ஏன் அதற்கு நீங்கள் முன் வரவில்லை? இது உங்களது இயலாமையை காட்டும் செயல்பாடுதானே!இக் காலகட்டத்தில் இவர்களை ஏழை சாரதிகள் என்றும் ஏழை உரிமையாளர்கள் என்றும் குரல் கொடுக்கின்றீர்கள் ஏன்?
 எதிர் வரும் உங்கள் தேர்தல் பயணத்துக்காகவா?உண்மையில் இவர்கள் ஏழை சாரதிகளா? ஏழை உரிமையாளர்களா? என்று உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

 உங்களுக்கு ஏழை என்பதற்குறிய வரைவிலக்கனம் தெரியாதா? இவர்கள் ஏழைகள் தான் என்று சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் நிரூபிக்க உங்களால் முடியுமா?

ஏன் இவ்வாறு பொய்களை கூறி மன்னார் நகர அபிவிருத்தியை மறை முகமாக எதிர்க்கின்றீர்கள்.இப்பிரச்சனை சம்பந்த பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்க்க பட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் தானே.

 அதை விடுத்து முகப்புத்தகத்தில் பதிவிடுவதன் மூலம் தீர்வு கிடைத்து விடுமா? உங்களுடைய முகப்புத்தகத்தில் 45ற்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் உள்ளார்கள் என ஒரு பதிவு போட்டிருந்தீர்கள்.

அதற்கு நான் எனது முகப்புத்தகம் ஊடாக 45ற்கு மேல் உரிமையாளர்கள் உள்ளார்கள் என்பதை ஊறுதி படுத்த முடியுமா ? என்று கேட்டேன்.

அதற்கு நீங்கள் மௌனம் காத்து விட்டீர்கள்.இதில் இருந்து நீங்கள் கூறியது 'பொய்' என உனரமுடிகிறது.
அதற்கு பதிலாக உங்களது'பினாமிகளால்'பயன் படுத்தபடும் மன்னார் மக்கள் குரல் என்ற முக நூலில் கொமன்ஸ் இல் எனக்கு 02 கடைகளை நகர சபையினர் தந்துள்ளள்ளனர்.

 அதனால் அவர்களுக்கு சார்பாக கதைப்பதாக   பதிவு இட்டிருந்தார்கள்.மன்னார் மக்கள் குரலிடம் கேட்கின்றேன் எனக்கு இரண்டு கடைகள் கிடை த்ததற்கான ஆதாரமும் காசு கட்டாமல் இருப்பதற்குறிய ஆதாரமும் உங்களிடம் இருந்தால் கூற முடியுமா?
நான் மன்னார் மக்கள் குரலிடம் கேட்கின்றேன்.

டெனீஸ்வரன்  நீங்கள் ஒரு நல்ல மனிதனாக தான் இருந்தீர்கள். எப்ப நீங்கள் உங்களுடைய அரசியல் பயணத்தின் மூலம் மன்னார் நகர அபிவிருத்திக்கு இடையூறு செய்ய ஆரம்பித்தீர்களோ அன்றிலிருந்து உங்களுக்கு பிடித்தது'சனி'என்.

டெனிஸ்வரன் உங்களுக்கு 'வால்' பிடிப்பதற்கும் முகவரி இல்லாத, படிப்பறிவு அற்ற செம்புகள் சிலது நீங்கள் போடும் 'எச்சிசோத்திற்கும்'' எலும்பு துன்டுக்கும்' நாய்களை போல் அடிமையாகி உங்களது அரசியல் பயணத்தின் ஊடாக மன்னார் நகரின் அபிவிருத்திக்கு முட்டுகொடுக்கும் வகையில் தவறான பாதையில் உங்களை கொண்டு செல்கின்றார்கள்.
இதனால் பாதிக்கபட போவது துயார் ?என்று சிந்தியுங்கள்.என குறிப்பிட்டுள்ளார்.



மன்னார் மாவட்ட தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கம் ஏழை சாரதிகள் சங்கம் இல்லை-செயலாளர் என்.ஆர்.சுதர்சன். Reviewed by NEWMANNAR on May 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.