லக்ஸ்மி கரங்கள் அமைப்பினால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 40 குடும்பங்களுக்கு உதவி -Photo
லக்ஸ்மி கரங்கள் லண்டன் அமைப்பினால் இன்று நான்காம் கட்டமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தாங்குளம் , கருங்கண்டல் பிரிவுகளில் இருந்து மிகவும் நலிவடைந்த 40 குடும்பங்களை தெரிவு செய்து தலா 1500/- வீதம் வழங்கி வைக்கப்பட்டது லக்ஸ்மி கரங்களுக்கு கரம் கொடுத்த காத்தாங்குளத்தை சொந்த இடமாக கொண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் திரு. நவம் அவர்கள் நிதி பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திரு. சந்திரலிங்கம் ஜசிந்தன் அவர்களும் குறித்த இரு பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள் இந் நிகழ்வினை அமைப்பின் இணைப்பாளர் திரு. குலநாயகம் மற்றும் சி. சிறி GS ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தார்கள் தொடர்ச்சியாக “ லக்ஷ்மி கரங்கள் “ அமைப்பானது புலம்பெயரந்துள்ள எமது உறவுகளின் கரங்களை பற்றிக்கொண்டு தாயகத்திலுள்ள உறவுகளை வாழ வைத்துக்கொண்டுள்ளார்கள் பயன் பெற்ற மக்கள் தங்களின் நன்றிகளை “ லக்ஷ்மி கரங்கள் “ லண்டன் அமைப்பினருக்கு தெரிவித்தாரகள்.
லக்ஸ்மி கரங்கள் அமைப்பினால் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 40 குடும்பங்களுக்கு உதவி -Photo
Reviewed by Author
on
May 15, 2020
Rating:

No comments:
Post a Comment