மன்னாரில் இறைச்சி கோழி விற்பனை நிறுத்தம்
கோழி இறைச்சிக்கான அதிகூடிய கட்டுப்பாட்டு விற்பனை விலையை அதிகரிக்க கோரி மன்னார் மாவட்ட கோழி விற்பனை உரிமையாளர்கள் கோழி இறைச்சி மற்றும் கோழி விற்பனையை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தினால் தோலுடனான கோழி ஒரு கிலோ- 430 ரூபா எனவும் உரித்த கோழி 500 ரூபாய் எனவும் வர்தமானி அறிவுருத்தல் ஊடாக விலை நிர்ணயித்திருந்த நிலையில் குறித்த விலைக்கு விற்பனை செய்தால் தாங்கள் அதிக அளவு நட்டத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நிர்ணய விலையை அதிகரித்து நிர்ணயிக்குமாறும் கோரி மன்னார் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் வியாபார நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கோழிகளின் விற்பனை விலைகளை அதிகரித்தமையினால் கோழி விலை மற்றும் போக்குவரத்து செலவீனம், கோழி தீவனம், உற்பட அனைத்தையும் உள்ளடக்கியே தற்காலிகமாக தாங்கள் விலைகளை அதிகரித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மொத்த விற்பனையில் ஈடுபடும் பண்ணைகள் விலைகளை குறைத்தால் மாத்திரமே சில்லறை வியாபரிகளாகிய நாங்கள் கோழியின் விலையை குறைத்து விற்பனை செய்ய முடியும் எனவும் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்து சிறிய அளவிலாவது இலாபம் அடைய கூடிய விலையையாவது அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என கோழி விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதிய விலைக்கு விற்பனை செய்யாத வியாபாரிகளுக்கு எதிராக மன்னார் நுகர்வோர் அதிகாரபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இறைச்சி கோழி விற்பனை நிறுத்தம்
Reviewed by Admin
on
June 21, 2020
Rating:
Reviewed by Admin
on
June 21, 2020
Rating:






No comments:
Post a Comment