மிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா? சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் கண்டனம்....!
அளுத்கம, தர்கா நகரில் சேர்ந்த விசேட தேவையுடைய சிறுவனான தாரிக் அஹமட்
மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் பொலிஸாரினால் கடந்த 25ஆம் திகதி
நடந்தேறியிருக்கிறது.
கடந்த 25ஆம் திகதி ஊரடங்கு
சட்டம் அமுலில் இருந்த நிலையில் தர்கா நகரைச் சேர்ந்த தாரிக் அஹமட் எனும்
விசேட தேவையுடைய 14 வயது சிறுவன் வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் மிகவும்
கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
இதனை சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட இரண்டு கண்காணிப்புக் கமரா காணொளிகள் உறுதிப்படுத்துகின்றன.
இச்சம்பவமானது
சட்டத்துக்கு முரணானதும், மனித உரிமை மீறல் செயற்பாடும், சிறுவர்
துஸ்பிரயோகமுமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ்
பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று சனிக்கிழமைi(6) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுகையில்.....
பொது
மக்கள் எவராயினும் ஒரு தவறை செய்யும் போது பாதுகாப்பில் இருக்கின்ற அல்லது
கடமையில் இருக்கின்ற ஒரு அதிகாரி தாக்குவது அல்லது வேறு முறையில் தண்டனை
வழங்குவது முடியாது. சட்டத்துக்கு முன் நிறுத்தி சட்டத்தின் ஊடாகவே தண்டனை
வழங்கப்பட வேண்டும்.
இப்படி சட்டம் இருக்க
கடமையில் இருந்த பொலிஸாரினால் ஒரு சிறுவன் மீது அதுவும் வலது குறைந்த
சிறுவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தியது ஒரு சிறுபான்மை
இனத்தவரின் மீது பாய்ந்த பாய்ச்சலாகவே கருதப்படுகிறது.
கடந்த நாளில் ஒரு நாயை சுட்டுக் கொன்றதற்காக எமது நாட்டிலும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது
ஒரு வரவேற்கத்தக்க விடயம் தான்; இருப்பினும் இந்த நாட்டில்
மிருகங்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி கூட சிறுபான்மை இனத்து சிறுவனான
அதுவும் வலது குறைந்த ஒரு சிறுவனுக்கு இல்லையா?
மேலும்
இது போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவிலும் நடந்தேறியிருக்கிறது. அமெரிக்க
அதிகாரி ஒருவர் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் மீதான தாக்குதலில் அவர்
மரணித்ததன் காரணமாக அமெரிக்காவில் பொலிஸாருக்கு எதிராக நாட்டுக்கு எதிராக
பொது மக்களினால் பாரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே
அதிகாரிகள் இது போன்ற சட்டத்துக்கு முரணான முறையில் நடக்கின்ற
காரணத்தினால் நாட்டுக்கும் சட்டத்திற்கும் மக்களின் மத்தியில் மதிப்பற்ற
நிலை உருவாகிறது.
எனவே இந்த சம்பவம் தொடர்பில்
உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை
எடுக்கப்படவில்லை எனில் இது ஒரு சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான ஒரு
நீதியாக கருதப்படுகிறது.
மேலும் இச்சம்பவம்
தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை எனின் சட்டத்தரணி என்ற ரீதியில் நான்
தாரிக் அஹ்மட்க்கு ஆதரவாக முன்னெடுப்புகளை செய்ய தயாராக உள்ளேன் என
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் மேலும்
தெரிவித்தார்.
மிருகத்திற்கு வழங்கப்பட்ட சட்டம் கூட இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு இல்லையா? சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக் கண்டனம்....!
Reviewed by Author
on
June 06, 2020
Rating:

No comments:
Post a Comment