இன்றைய ஊரங்கு தொடர்பான அறிவிப்பு....
இன்று முதல் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை முலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில்.. இன்று, ஜுன் 06, சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களை இயக்குகின்ற போதும்,
அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்றைய ஊரங்கு தொடர்பான அறிவிப்பு....
Reviewed by Author
on
June 06, 2020
Rating:

No comments:
Post a Comment