மன்னாரில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் மத்தியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்....
கோரோனா அச்சுருத்தல் மத்தியிலும் கடும்
சுகாதார கட்டுப்பாடுகளுடன் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்டத்தில் உள்ள
பாடசாலைகள் அனைத்திலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன
உயர்தரம்
மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்காக எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்காக
முதல் கட்டமாக இன்றையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்
அனைத்து மாணவர்களும் இன்றைய தினம் முக கவசங்கள் அணிந்து பாடசாலைக்கு சமூகம்
அளித்தமை குறிப்பிடதக்கது
அத்துடன்
மாணவர்கள் அனைவரும் பாடசாலை நுழைவாயில் பகுதியிலே வைத்தே வெப்ப பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டு கைகல் சுத்தமாக கழுவிய பின்னரே வகுப்பறைக்குள்
அனுமதிக்கப்பட்டனர் மேலும் பாடசாலைக்குள் மாணவர்கள் நுழையும் பேதே பாடசாலை
ஆசிரியர்களால் மாணவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைகள்
வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது....
மன்னாரில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் மத்தியில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்....
Reviewed by Author
on
July 06, 2020
Rating:

No comments:
Post a Comment