இன்றுடன் முடிவிற்கு வந்த பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்பகிஷ்கரிப்பு..........
நாடளாவிய ரீதியில் கடந்த 16 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்களால் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது
நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்ட ஒழுங்கு விதிகள்
தொடர்பில்
சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் தங்களுக்கு
அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என அறிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள்
சங்கத்தால் கடந்த 11 நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று
(29) முடிவுக்கு கொண்டுவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.30 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிப்பதற்குதீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சருடன் நேற்று (28) இடம்பெற்ற
கலந்துரையாடலின் பின்னர் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில்பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார
வைத்திய அதிகாரிகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அது தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் பிரதமருடனான சந்திப்பில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இன்றுடன் முடிவிற்கு வந்த பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்பகிஷ்கரிப்பு..........
Reviewed by Author
on
July 29, 2020
Rating:

No comments:
Post a Comment