கங்கையில் இறங்கிய பொலிஸ் அதிகாரியை இழுத்து சென்ற முதலை...
நேற்று (01) இரவு 10.30 மணியளவில் குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட சிலர் அவ்விடத்தில் இருந்த போது அதில் ஒருவரின் கைப்பேசி தவறி கங்கையில் விழுந்துள்ளது.
அதனை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி கங்கையில் இறங்கியுள்ளார். பின்னர் தன்னை முதலையொன்று கடிப்பதாக அவர் சத்தமிட்டுள்ளார்.
எனினும் அவரை காப்பாற்ற எவரும் முன்வராததால் கங்கையில் மூழ்கி பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்....
காணாமல் போன பொலிஸ் அதிகாரியை தேடி அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
54 வயதுடைய கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்... சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கங்கையில் இறங்கிய பொலிஸ் அதிகாரியை இழுத்து சென்ற முதலை...
Reviewed by Author
on
July 02, 2020
Rating:

No comments:
Post a Comment