வெவ்வேறு வீடுகளில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க தடை ...........
புதிய உள்ளூர் முடக்கநிலை விதிகள் இங்கிலாந்து முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு வந்துள்ளன.
பெரும்பாலும் மக்கள் சமூக விலகல் விதிகளை பின்பற்றாததே இந்த தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணம் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப அறிவிப்புக்கு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கூடுதல் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதனிடையே, இந்த நடவடிக்கைகள் குறித்து தெளிவு இல்லாதது மற்றும் அவற்றை இரவில் தாமதமாக அறிவித்ததற்காக தொழிற்கட்சி அரசாங்கத்தை விமர்சித்துள்ளது.
கிரேட்டர் மன்செஸ்டரில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் உள்ளனர். இதில் டார்வென், பர்ன்லி, ஹைண்ட்பர்ன், பெண்டில், ரோசண்டேல், பிராட்போர்ட், கால்டர்டேல் மற்றும் கிர்க்லீஸுடன் பிளாக்பர்ன் ஆகிய பகுதிகள் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுவதால் பாதிக்கப்படுகின்றன.
நள்ளிரவில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைகள், வீடுகளில் அல்லது தனியார் பூங்காக்களில் வெவ்வேறு வீடுகளை சந்திக்க அனுமதிக்கப்படாது என்பதாகும். தனிப்பட்ட குடும்பங்கள் இன்னும் பப்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்ல முடியும், ஆனால் வௌ;வேறு வீடுகளை
சேர்ந்தவர்களை சந்திக்க முடியாது.
வெவ்வேறு வீடுகளில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க தடை ...........
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment