கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கார் தயாரிப்பாளர்கள் 11000ற்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு....
ஜூன் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 381,357 கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் காலப்பகுதியில் 42 சதவீதம் குறைந்துள்ளது என்று மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் முடக்கநிலை, வேலை இழப்புகளுக்கு வழிவகுத்தது. கடந்த ஆறு மாதங்களில், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களில் 11,349பேர் வேலைகளை இழந்துவிட்டதாக வர்த்தக அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் கார் உற்பத்தி 48 சதவீதம் குறைந்துள்ளது. 56,594 அளவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 முடக்கநிலை காரணமாக உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான தேவையே, உற்பத்தியை கட்டுப்படுத்தியதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கார் தயாரிப்பாளர்கள் 11000ற்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு....
Reviewed by Author
on
July 31, 2020
Rating:

No comments:
Post a Comment