மத ஆக்கிரமிப்புக்களையும், ஆதிக்க முயற்சிகளையும் விரைவில் தடுப்போம் - தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் மனோ ஐங்கரசர்மா
பல இந்துக் கோவில்கள் பல்வேறு அன்னிய ஆக்கிரமிப்புக்களின் போது இடிக்கப்பட்டு, மாற்று மதத் தலங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும். இனிவரும் காலத்தில் அவ்வாறு தொடர்ந்து இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் ஐங்கர சர்மா தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறிப் பிட்டுள்ளார்.
தற்போதும் கூட மென்போக்கில் பல்வேறு ஆக்கிரமிப்பு முயற்சிகளும், ஆதிக்க முயற்சிகளும் எமது சைவத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாகவும் சைவ மக்கள் சார்பில் செயற்படக்கூடிய, அவர்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கத்தக்க அரசியல் பிரமுகர்களை எமது சமுகம் கொண்டிருக்காமையாலேயே இந்த நிலை தோன்றிருப்பதாக குறிப்பிட்டார்..
இலங்கையில் உள்ள பல சமயத் தலங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படுமிடத்து மக்கள் உண்மையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும், ஆனால் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள உரிய தரப்பினரும், அரசும் அனுமதி வழங்குவார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
சைவத் தமிழரின் பாரம்பரியம் மிக்க வாழ்கையை பாதுகாப்பதற்காக அரசியல் பலத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே தாம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழரின் அரசியல் உரிமைகள் தொடர்பிலும் தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் தேவைப்படுமிடத்து மக்கள் அபிப்பிராப்படி சாத்தியமான வழிகளில் செயற்படும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சைவத் தமிழ் மக்கள் தமது வாக்குகளை சிதறடிக்காது "கோடரி" சின்னத்திற்கு இட்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்...
மத ஆக்கிரமிப்புக்களையும், ஆதிக்க முயற்சிகளையும் விரைவில் தடுப்போம் - தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் மனோ ஐங்கரசர்மா
Reviewed by Author
on
July 14, 2020
Rating:

No comments:
Post a Comment