மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாகும் புதிய அரசாங்கத்தில் நாங்கள் சக்தி மிக்கவர்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம்.....
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கூடிய ஒரு புதிய அரசாங்கத்தை
நாங்கள் உருவாக்குவோம். மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் தலைமையிலான புதிய
அரசாங்கத்தில் சக்தி மிக்கவர்களாக நாங்கள் இருந்து வன்னி மக்களுக்கு
தேவையானவற்றை செய்து கொடுப்போம் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக
இடதுசாரி முன்னணியின் தலைவருமான பிரபாக கணேசன் தெரிவித்தார்.
மன்னாரில்
உள்ள ஜனநாயக இடது சாரி முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று
செவ்வாய்க்கிழமை (14) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார்
மாவட்டத்தை சோர்ந்த எமது ஜனநாயக இடது சாரி முன்னணியின் வேட்பாளர்கள்
இருவர் தாங்கள் கட்சியில் இருந்தும் தேர்தலில் இருந்தும் விலகி இருப்பதாக
அறிவித்திருந்தார்கள்.
உண்மையிலேயே அவர்கள்
விலகவில்லை. அவர்களை நாங்கள் விலக்கி விட்டோம் .ஏனேனில் வேட்புமனு
கைசாத்திட்ட மறுநாளே அவர்கள் இருவரும் மக்கள் ஆதரவை பெருவோம் என்று சொல்லி
கொண்டு வந்த இருவரும் அடுத்த நாள் முதல் தங்களுக்கு பெரும் தொகையான ஒரு
பணத்தை கொடுத்தால் தான் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்கள்.
உண்மையிலேயே அவர்கள் எந்தவொரு பிரதேச சபை தேர்தலில் அல்லது மாகாண சபை தேர்தலிலோ எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டவர்கள்.
இருப்பினும் அவர்களுக்கு இளைஞர்கள் என்ற ரீதியில் நான் சந்தர்ப்பம்
வழங்கினேன். இருந்தாலும் அவர்கள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி என்னிடம்
இருந்து ஒரு பெரும் தொகையான பணத்தை பெற்று கொள்ளலாம் என நினைத்தார்கள்.
அப்படி நினைப்பவர்கள் நிச்சையம் மக்கள் சேவை செய்யப்போவது இல்லை என்று
தெரியும். அது மட்டும் அல்ல. இங்கே அமைச்சர் ஒருவரின் பின் புலத்தில்
உள்ளவர் ஒருவர் தான் அவ் இருவரின் ஊடக சந்திப்பின் பின்னியில்
இருக்கின்றார் என்று தெரிய வருகின்றது.
இப்போது
அவர்கள் என்னை பார்த்து பயப்பிடுகின்றார்கள் என்பதே உண்மை. எனவே வாக்குகள்
என்பது பிரபா கணேசனின் வாக்குகளே ஒழிய வேறு எந்த வேட்பாளர்களின்
வாக்குகளும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்.
அதே
நேரத்தில் நான் ஒன்றும் வன்னிக்கு புதிய ஒருவன் இல்லை. கடந்த மூன்று
வருடங்களாக நான் வன்னி மாவட்டத்தில் இருந்து கொண்டு வன்னி மாவட்டத்தில்
இருக்கும் அதாவது வவுனியாவில் இருக்கும் 505 கிராமங்கள் முல்லைத்தீவில்
இருக்கும் 684 கிராமங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் என
மொத்தமாக 1700 கிராமங்களிலே சுமார் 800 மேற்பட்ட கிராமங்களுக்கு 3
வருடகாலமாக விஜயம் செய்து அந்த மக்களின் நிறை குறைகளை கண்டறிந்து
அவர்களிடம் இருந்து அவர்களுக்கு எது அவசியப்படுகின்றது என்று உணர்ந்து தான்
இன்றி நான் தேர்தல் கலத்தில் களம் இரங்கியிருக்கின்றேன்.
ஆகவே
நான் வன்னி மாவட்டத்திற்கு புதியவன் இல்லை. அதே நேரத்தில் நான் இம் மூன்று
வருட காலப்பகுதில் வன்னியில் இருந்ததை விட வன்னி மக்கள் பிரதி நிதிகள்
கொழும்பில் அதிகமாக இருந்துள்ளனர் என்பதே உண்மை என அவர் மேலும்
தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாகும் புதிய அரசாங்கத்தில் நாங்கள் சக்தி மிக்கவர்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம்.....
Reviewed by Author
on
July 14, 2020
Rating:

No comments:
Post a Comment