ரஸ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
தலைமன்னார் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் முடிவடைந்த விசாவுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஸ்யபிஜை ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்
குறித்த ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று தொடர்பான PCR பரிசோதனை இடம் பெற்று இன்றைய தினம் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் ரஸ்ஜபிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரஸ்யபிரஜை சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி டினேசனினால் மிரிகானா ஊடாக குறித்த நபரை ரஸ்யாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது
குறித்த கோரிக்கையை ஏற்று குறித்த நபரை ரஜ்யபிரஜையை சொந்த நாடான ரஷ்யா நாட்டுக்கு மிரிகானா ஊடாக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஸ்யா பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
Reviewed by Admin
on
August 13, 2020
Rating:

No comments:
Post a Comment