சட்டத்தின் ஆட்சி தொடர்பான விசேட செயலமர்வு
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும் தனி மனிதனுடைய உரிமைகளையும் அறிந்து கொள்வதன் ஊடாக மத ரீதியான பிரச்சினைகளை சமரசமாக்கும் முகமாக மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொணிப்பொருளில் சட்டத்தின் ஆட்சி தொடர்பான இரு நாள் செயலமர்வு தேசிய சமாதானபேரவையின் மாவட்ட இணைப்பாளர் திரு.உவைஸ் தலைமையில் தொடர்பாடலுக்கான மையம்(CCT) நிறுவனத்தின் அமைப்பாளர் திரு.ஜோண்சன் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது
மாவட்டரீதியில் மத நல்லிணக்கம் தொடர்பாக செயலாற்றும் மதகுருக்கள் கிராம உத்தியோகஸ்தர்கள் சமூக ஆர்வளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த செயலமர்வில் கலந்து கொண்டனர்
குறித்த செயலமர்வில் இலங்கையின் சட்டத்தின் அடிப்படையில் தனி ஒரு மனிதனுக்கு காணப்படும் சட்டரீதியான உரிமைகள் தொடர்பாகவும் மத ரீதியாக காணப்படும் சுகந்திரம் தொடர்பாகவும் சட்டத்தரணி திரு.M.A.ஹக்கீம் அவர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன் நடைமுறைபயிற்சிகள் வழங்கப்பட்டது
மேலும் குறித்த பயிற்சியின் ஊடான நடைமுறை பயன்கள் தொடர்பான பயிற்சிகள் நாளைய தினமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் நகர் நிருபர்
13.08.2020
சட்டத்தின் ஆட்சி தொடர்பான விசேட செயலமர்வு
Reviewed by Admin
on
August 13, 2020
Rating:

No comments:
Post a Comment