மன்னாரில் வாக்கு எண்ணும் நிலையத்தை நோக்கி வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் இன்று புதன் கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெற்ற வாக்களிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் மாலை 5.45 மணிக்கு பிற்பாடு மன்னாரில் வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஐந்து பிரதேச செயலகங்களையும் உட்படுத்திய 76 வாக்களிப்பு நிலையங்களில் 79.49 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவில் 28 ஆயிரத்து 389 வாக்குகளும், நானாட்டன் பிரதேச செயலகபிரிவில் 10 அயிரத்து 624 வாக்குகளும் , முசலி பிரதேச செயலக பிரிவில் 9 ஆயிரத்து 61 வாக்குகளும் , மாந்தை மேற்கில் 9 ஆயிவத்து 587 வாக்குகளும் , மடு பிரதேச செயலக பிரிவில் 5ஆயிரத்து 14 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 62அயிரத்து 675 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இன்றைய தினம் புதன் கிழமை பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் வாக்கு நிறப்பப்பட்ட பெட்டிகள் அனைத்தும் விசேட பேருந்துகள் மூலம் பிராதன வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றது.
இன்றைய தினம் முழுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டு நாளை காலை 7 மணியளவில் என்னப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(VIDEO,PHOTOS)-
(மன்னார் நிருபர்)
(05-08-2020)
மன்னாரில் வாக்கு எண்ணும் நிலையத்தை நோக்கி வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படுகின்றது.
Reviewed by Author
on
August 05, 2020
Rating:
No comments:
Post a Comment