ஐரோப்பிய ஒன்றியம் தனது Erasmus+ இணை முதுமானிப் பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது
இலங்கையின் மாணவர்களுக்கு தமது கல்வி மற்றும் விருத்தி செயற்பாடுகளை தொடர்வதற்கான உதவிகளை வழங்குவதை தொடரும் வகையில் 13 மாணவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் Erasmus+ இணை முதுமானிப் பட்டப்படிப்பு திட்டத்தின் கீழ் புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவித்துள்ளது. எமது சமூகங்களில் காணப்படும் பாரதூரமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் மாணவர்களுக்கு அவசியமான அறிவை வழங்கிரூபவ் வகுப்பறை சூழலிருந்து பணியிடச் சூழலுக்கு மாறிக் கொள்ள உதவியளிக்கும் வகையில் இந்த பட்டப்படிப்புத் திட்டம் அமைந்துள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் காணப்படும் பிரத்தியேகமான உள்ளடக்கமாக மாணவர்களுக்கு ஆகக்குறைந்தது இரு ஐரோப்பிய நாடுகளில் மூன்று பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்ந்து இந்த பல்கலைக்கழகங்களிலிருந்து இணை பட்டப்படிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்த ஆண்டின் புலமைப்பரிசில் வழங்கல்களில் கற்கைகளின் பத்து பிரிவுகள் உள்ளவாங்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் போன்ற ஐந்து நாடுகளில் நகர காலநிலை மற்றும் நிலைபேறாண்மை வெப்பவலய உயிரியல் பரம்பல் மற்றும் சூழல்கட்டமைப்புகள்ரூபவ் வெள்ள இடர் முகாமைத்துவம் மற்றும் கடல்வாழ் சூழல் போன்றன அடங்கியுள்ளன.
புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் பொலொக்னா பிரசல்ஸ் க்ளாஸ்கோ போர்டெக்ஸ் மற்றும் ட்ரெஸ்டென் போன்ற ஐரோப்பிய நகரங்களில் காணப்படும் பல்கலைக்கழகங்களில் சர்வதேச பயிலல் சூழலில் கற்றல் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தூதுவர் டெனிஸ் சைபி கருத்து தெரிவிக்கையில் இந்த வாய்ப்புகளிலிருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்களை ஊக்குவித்திருந்தார். வகுப்பறையில் பெற்றுக் கொள்ளும் அறிவுக்கு மேலாக வெளிநாடுகளில் பயில்வது என்பது அதிகளவு வெகுமதியளிக்கும் அனுபவமாகும். உங்கள் தொழில் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தப்படுவதுடன் நாம் பயிலும் விடயங்கள் எமது வாழ்க்கையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பான உங்கள் புரிந்துணர்வை மேம்படுத்துவதுடன் உங்கள் பிரத்தியேக அபிவிருத்தியிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றது. ஏனைய நாடுகள் ஏனைய சமூகங்கள் போன்றவற்றைப் பற்றி புரிந்து கொள்ளவும் முடியும். நீங்கள் நன்றாகப் படித்தால் ஆகக்குறைந்தது இரண்டு ஐரோப்பிய நாடுகள் பற்றி அறிந்து கொள்ள முடிவதுடன் மூன்று பல்கலைக்கழகங்களிடமிருந்து முதுமானிப் பட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.´ என்றார்.
Erasmus+ இணை முதுமானிப் பட்டப்படிப்பு என்பது பெருமைக்குரிய சர்வதேச கற்கைத் திட்டமாக அமைந்துள்ளதுடன் உயர் கல்வி நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பினூடாக தனிநபர்களுக்கு பயிலல் மற்றும் நிதி வழங்கல் வசதியை வழங்குகின்றது. தனிநபர்களுக்கு அவசியமான திறன்களை பெற்றுக் கொள்வதற்கும் ஐரோப்பாவின் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்களிலிருந்து அவர்களின் திறன்களை ஊக்குவித்துக் கொள்வதற்கு இந்தத் திட்டம் உதவியாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment