இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா தொற்று.............
தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 709 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகத்தை துறை அறிவித்துள்ளது.
அந்தவகையில் தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரத்து 698 பேருக்கும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் 121 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6
ஆயிரத்து 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 850 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் இதுவரை மொத்தம் 2 இலட்சத்து 89 ஆயிரத்து 787 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார துறை அறிவித்துள்ளது...

No comments:
Post a Comment