நாளொன்றுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறை - இலங்கை மின்சார சபை
நாளொன்றுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை வரையான 4 நாட்களுக்கு, இரவில் பி.ப.
6.00 - 7.00 மணி, பி.ப. 7.00 - 8.00 மணி, பி.ப. 8.00 - 9.00 மணி, பி.ப.
9.00 - 10.00 மணி ஆகிய நான்கு நேர அடிப்படையில் தினமும் ஒரு
மணித்தியாலமும், பகலில் மு.ப.10.00 - 11.45 மணி, மு.ப.11.45 - 1.30 மணி,
பி.ப.1.30 - 3.15 மணி, பி.ப.3.15 - 5.00 மணி எனும் அடிப்படையில் 1.45
மணித்தியாலமும், நாடு முழுவதும் நான்கு வலயங்களாக மின்வெட்டு
அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் பகல் வேளையில் கேள்வியின் அளவைப் பொறுத்து மின்சார தடை
மேற்கொள்வதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட குறித்த முன்மொழிவுபட்டியலுக்குஅனுமதி வழங்கியுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது..
சனிக்கிழமை இரவில் மாத்திரம் ஒரு மணித்தியாலத்திற்கு குறித்த நேரத்தில்
மின்வெட்டு அமுல் படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது..
நேற்றையதினம் (17) கெரவலபிட்டி உப மின்நிலைய 'லக்தனவி' மின்னுற்பத்தி தொகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 7 மணி நேரம்
நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை ஈடு செய்வதற்காக நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அதிக மின் வளங்கலை பெறும் நோக்கில் செயற்படுத்தப்பட்ட நுரைச்சோலை அனல் மின்நிலையம் சுமார் 300 இலிருந்து 500 செல்சியஸ் வரை சூடாகிய நிலையில் அதன் இயக்கம் சீராக அமைவதற்கான தன்னியக்க குளிர்விக்கும் தொகுதியின் இயக்கம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறித்த தொகுதி படிப்படியாக குளிர்வடைந்து, அதன் இயக்கம் வளமைக்குதிரும்ப 3 நாட்கள் எடுக்கும் என்பதால், அதனை ஈடு செய்ய இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகா வாற் மின்வலு தற்போது கிடைக்காத நிலையில், அதியுச்ச மின்சார பாவனைக்காலமான பிற்பகல் 6.00 மணி முதல் 10.00 மணி வரை மின்வெட்டை அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பொதுமக்கள் இக்காலப் பகுதியில் மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறும், இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது..

No comments:
Post a Comment