தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் விவகாரத்தில் மீண்டும் பல சர்ச்சைகள்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்று வருகின்றது.
பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சிக்கு 17 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, இலங்கை தமிழரசுக் ட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பவற்றிற்கு தலா ஒரு ஆசனமும்
வழங்கப்பட்டிருந்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அபே ஜனபல கட்சி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியன தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக மீண்டும் ஆராயப்படவுள்ளது.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற தெரிவு குறித்த தீர்மானம் மிக்க கலந்துரையாடலும் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது...

No comments:
Post a Comment