எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டியில் புதிய அமைச்சரவை பதவி பிரமாணம்.....
எதிர்வரும் 12ஆம் திகதி கண்டியில் வைத்து புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவையை 26 பேருடன் மட்டுப்படுத்தி இராஜாங்க, பிரதி மற்றும் திட்டம் அமைச்சர்களும் குறித்த தினத்தில் பதவி பிரமாணம் செய்யவுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
புத்த சசனா கலாச்சார விவகார அமைச்சர் கோட்டபாய ராஜபக்ச
நிதி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்சவும்
நீர்ப்பாசன அமைச்சர் சாமல் ராஜபக்சவும்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி
விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே
சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
ஊடக துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுதந்திர கட்சிக்கு இரண்டு தொடக்கம் மூன்று வரையிலான அமைச்சு பதவி
வழங்கப்படவுள்ளதாகவும் இதனை மைத்திரிபால சிறிசேனவிற்கும், நிமல் சிறிபால
டி சில்வாவிற்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சரத் வீரசேகர ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
அத்துடன் பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சரத் வீரசேகர ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டியில் புதிய அமைச்சரவை பதவி பிரமாணம்.....
Reviewed by Author
on
August 10, 2020
Rating:

No comments:
Post a Comment