எஸ்.எப்.லொக்கா சுட்டுக்கொலை....
அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் எஸ்.எப்.லொக்கா மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிள் ஊடாக தப்பிச் சென்றவர்கள் தொடர்பாக சி.சி.டி.வி காணொளி பதிவு ஊடாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் ஜனக்க பிரியந்த சமரசிங்கவினால் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினை தொடர்ந்தே இவ்வாறு விரைவான
விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் – தஹாயியாகம சந்திப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க நேற்று (புதன்கிழமை) கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக விரைவான விசாரணையைமுன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றும் அமைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
எஸ்.எப்.லொக்கா சுட்டுக்கொலை....
Reviewed by Author
on
August 06, 2020
Rating:

No comments:
Post a Comment