பேரூந்தின் சில்லினுள் சிக்குண்டு பரிதாபமாக நபர் ஒருவர் உயிரிழப்பு....
நேற்று (17) பிற்பகல் 2.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா கிளைக்கு சொந்தமான பஸ் ஒன்று உடபுஸல்லாவிற்கு செல்வதற்காக நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்குள் வந்த வேளையில், நபர் ஒருவர் பாதையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன் போது குறித்த நபர் எதிர்பாராத விதமாக, பஸ்ஸில் மோதுண்டு பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதோடு, பஸ் வண்டியின் சாரதியை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் பஸ் வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment