செங்கலடி மாணவன் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த வாள் வெட்டுக்குழு உறுப்பினர் சரண் -படம் இணைப்பு - 300 மேற்பட்ட இளைஞர்கள் வாள் வெட்டு குழுவில்
செங்கலடி மாணவன் கொலை தொடர்பில் கொலையாளி என சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த s.ஜர்சயன் என்பவர் நேற்று சரண் அடைந்துள்ளார் ,
இவர் கடந்த 6 மாதங்களாக செங்கலடியில் உள்ள பிரபல லீசிங் கம்பனி கிளையில் வேலைபார்பதாக தெரிய வருகின்றது ,
இதே வேளை கொலையுடன் தொடர்ட்புடைய இன்னொருவரையும் நேற்று ஊர் இளைஞர்கள் போலீசாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளனர் ,
செங்கலடி பிரதேசத்தில் 300 மேற்பட்ட இளைஞர்கள் வாள் வெட்டு குழுவினராக அட்டகாசம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐயன்கேணி, கணபதிப்பிள்ளை கிராமம், ரமேஸ்புரம், செங்கலடி,கொம்மாதுரை, ஆண்டார்குளம் பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 300 ற்கு மேற்பட்ட இளைஞர்கள் வாள் வெட்டு குழுக்களாக செயற்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கோயில் திருவிழாக்கள், பின்நேர வகுப்பு நடைபெறும் இடங்கள், பொது நிகழ்வுகளில் வாள்களுடன் சுற்றி திரிவதுடன். வீதிகளில் மோட்டார் சைக்கிளில் கூச்சல் சத்தங்களுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பல இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகின்றனர்.
மிக இள வயதில் காணப்படும் இந்த இளைஞர்கள் பலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களினால் தமிழ் சமூதாயம் மிக மோசமான சீரழிவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

No comments:
Post a Comment