வவுனியாவில் சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (29) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் , தமிழரசு கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் , கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தின் இறுதியில் இன்றைய கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
Reviewed by Author
on
August 29, 2020
Rating:

No comments:
Post a Comment