மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை-அரச போக்கு வரத்து சேவையை தற்காலிகமாக மேற்கொள்ள வழங்கப்பட்ட இடம் மூடப்பட்டது.
-மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை-அரச போக்கு வரத்து சேவையை தற்காலிகமாக மேற்கொள்ள வழங்கப்பட்ட இடம் மூடப்பட்டது.
(மன்னார் நிருபர்)
(16-09-2020)
மன்னாரில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடம் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு அதிரடியாக மூடப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் இடம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் மன்னார் நகர சபையின் புதிய பேரூந்து தரிப்பிட பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
-குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் அரச மற்றும் தனியார் சேவைகள் இணைந்த சேவையாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் மாத்திரம் இடம் பெற்று வந்த போதும், மன்னார் அரச போக்குவரத்து சேவைகள் இடம் பெறவில்லை. எனினும் மன்னார் நகர சபையிடம் கால அவகாசம் கோரிய நிலையில் தொடர்ச்சியாக தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தில் அசை போக்கு வரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
-இந்த நிலையில் கோரிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அரச போக்குவரத்துச் சேவையினை மேற்கொள்ள மன்னார் நகர சபையினால் தற்காலிகமாக வழங்கப்பட்ட இடத்தை மன்னார் நகர சணை நேற்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக மூடியுள்ளது.
- மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு அதிரடியாக குறித்த இடம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
மன்னார் நகர சபையின் அதிரடி நடவடிக்கை-அரச போக்கு வரத்து சேவையை தற்காலிகமாக மேற்கொள்ள வழங்கப்பட்ட இடம் மூடப்பட்டது.
Reviewed by Admin
on
September 16, 2020
Rating:

No comments:
Post a Comment