இரு வாகனங்களுடன் மோதிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் - பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஹொரகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஜீப் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தி பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணத்த இருவரும் வத்துபிட்டிவல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் 48 வயதுடைய பஸ்யால பகுதியை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு வாகனங்களுடன் மோதிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் - பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
September 14, 2020
Rating:

No comments:
Post a Comment