இராணுவ சோதனை சாவடியில் வாகனங்கள் விபத்து!
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதவாச்சி ஏ9 வீதி பூவயா பாலம் அருகே நான்கு வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் மட்டுமே சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் வாகனங்கள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவை நோக்கி பயணிக்கும் வாகனங்களை புவயா பாலம் அருகே காணப்படும் இராணுவ சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை மேற்கொண்டிருந்த மூன்று வாகனங்கள் மீது லொறி மோதியது.
இராணுவ சோதனை சாவடியின் முன்பாக லொறி, கப்ரக வாகனம், ஹயஸ் வாகனம் மூன்றும் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது வேகமாக வந்த லொறி ஒன்று மோதியதால் கப்ரக வாகனத்துக்கும், ஹயஸ் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.
.
இராணுவ சோதனை சாவடியில் வாகனங்கள் விபத்து!
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment