பலாங்கொடையில் மாணவி சடலமாக மீட்பு; கொலையா?
16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் தாயார் வெளியே சென்று வீடு திரும்பிய போது கட்டிலுக்கு அருகில் உயிரிழந்த நிலையில் மகள் காணப்படுவதை அவதானித்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பலாங்கொடையில் மாணவி சடலமாக மீட்பு; கொலையா?
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment