வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கூட்டுறவு பயிற்சிநிலையத்தினை விடுவிக்குமாறு கோரிக்கை!
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சிநிலையத்தினை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தார்
வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் “பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் நீண்டகாலமாக புணர்வாழ்வு இணைப்பு காரியாலயமாக செயற்பட்டுவருகின்றது. அதனை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் அது இன்னும் விடுவிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத்தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு.திலீபன் இராணுவத்தின் வசம் உள்ள அரச கட்டிடங்கள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு வருகின்றது. குறித்த மாகாண கூட்டுறவு பயிற்சிநிலையமும் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்தார்
குறித்த பயிற்சிநிலையத்தினை விடுவிக்குமாறு கடந்த பலமுறை இடம்பெற்ற மாவட்ட,பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளாலும், பொது அமைப்புகளாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,அது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் பலவருடங்களாக அது இராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்படாத நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment